உள்ளத்தின் சோதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உள்ளத்தின் சோதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஜூலை, 2011

உள்ளத்தின் சோதனை மனதின் நிலையே வாழ்வின் வளம் ஆகும் . நிலத்தின் ஊன்றும் வித்து எது வென்றாலும் நீர் தெளித்து வந்தால் அது முளைத்துப் பயிராகி அதன் தன் தன்மைக்கேற் பயன் தருகிறது.அது போன்றே உள்ளத்தில் ஊன்றும் எண்ணங்களும் நாளுக்கு நாள் உறுதி பெற்று வாழ்வின் பயனாக விளைந்து விடும் . ஆகவே நமது வாழ்வு நலமுற வேண்டுமெனில் எந்த விதமான கெட்ட எண்ணத்தையும் நமது உள்ளத்தில் ஊன்றவோ வளரவோ விடக் கூடாது. கோபம்,வஞ்சம்,பொறாமை,வெறுப்புணர்ச்சி,பேராசை, ஒழுக்கம் மீறிய காம நோக்கம்,தற்பெருமை,அவமதிப்பு,அவசியமற்ற பயம்,அதிகார போதை, என்ற பத்து வகையும் நமது உள்ளத்தில் நிலைபெறமல் ஒட்டாமல் அவ்வப்போது ஆராய்ந்து, களைந்து கொண்டே இருக்க வேண்டும். இவை வளர்ந்தால் நல்லெண்ணம் வருவதற்கோ,நிலைப்பதற்கோ,இடமில்லாத துன்பம் தரும் காடாக நமது உள்ளம் மாறிவிடும். உடல் காந்த சக்தியை பாழாக்கிக் கொண்டே இருக்கும் ஒட்டைகளாக இக்கெட்ட குணங்கள் மாற்றி விடும். காலையிலும் மாலையிலும் 10 நிமிட நேரம் அமைதியாக உட்கார்ந்து உள்ளத்தை சோதனையிடும் பணியைத் தொடங்குங்கள்.30 நாட்களில்கிடைக்கும் வெற்றியை அனுபவத்தில் கண்டுமகிளுகள். -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி