திங்கள், 25 ஜூலை, 2011

நால் வருணம் வானில் நாம் காணும் பலகோடி அண்டங்களையும் ஒன்று கூட்டி நினைத்து அதனை பிரபஞ்சம் என்று கூறுகிறோம். எல்லா அண்டகளையும் சேர்ந்த ஒரு பெரிய இயக்கமாக இருப்பதால் அதனைப் பேரியக்கமண்டலம்,என்று நாம் கூறுகிறோம்.நாம் நட்சத்திரங்கலகக் காண்பது சுரியன்களே.அவற்றில் ஒன்று நாம் வாழும் நில உலகு இயங்கி வரும் சூரிய மண்டலம். நில உலகம் தோன்றிய பின் கணக்கிட முடியாத காலம் கடந்து ஓரறிவு உயிர் பொருளாகிய புல்,புண்டுசெடி,கொடி,மரங்கள் தோன்றின. பிறகு ஒன்றன்பின் ஒன்றாக இரண்டறிவு,மூவறிவு,நான்கறிவு,ஐயறிவுஉயிகளென விலங்கினம் விரிந்தன. சந்தர்ப்ப வசமாக இருவேறுபட்ட விலங்கினங்களின் உடலுறவில் இருந்து ஆதிகாலமனிதன் தோன்றினான். அந்தஒருமனிதனில் இருந்து கிளைத்து விரிந்தே மனிதசமுதாயம்.மனித இனம் விலங்கினங்களைப்போலவே இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக துய்த்து ஆறாவது அறிவாகிய சிந்தனை சிறப்புப் பெறாது கழிந்த காலம் மிகநீளம். எப்போது பூமியைக் கிளறி வித்தித்டுப் பயிராகிஇருப்பு வைத்து தானும் உண்டு பிறக்கும் வழங்கி வாழத் தெரிந்து கொண்டானோ, அதுவே மனிதன் ஆறாவது அறிவு ஒளிவிடத் தொடங்கியகாலம்.மனித இனம்தொடக்க காலத்தில்,ஆங்காங்குகிடைக்கும்.நிலவளம்,விளைபொருள்கள்,வாய்ப்பு இவற்றிர்கேற்பபொருட்களை உற்பத்தி செய்து பண்டமாற்றுமுறையில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வழ்ந்திரிந்தர்கள். பிறகு ஒரு குழுவினரோடு பிரகுழு கலப்புறுங்காலம் வந்தது.ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினருக்கு தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைக் மாற்றிக்கொள்ளும் தேவையும் ஏற்பட்டது. இவ்வாறு பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மற்றும் ஒரு புதிய தொழில் உண்டாயிற்று.இந்ததொழில் திறன்படச்செய்தவர்கள் வணிகர்களானர்கள்.இவர்களே வைசியர்கள் எனப்ட்டர்கள். பொருள் மிச்சம்,இடம் மாற்றம்,வணிகதொழில் என்றமூன்று நிலைமைகளால் வரியவன் எளியவனைத் தக்கிப்பொருள் பறிப்பதும், உயிர்கொலை என்ற வன்முறைச்செயல்கள் உருவாயின.சமுதாயக்கூட்டாக இதைத்தடுத்து எளியவர்களையிம் அவர்கள் உடமைகளையும் பாதுக்காக பொதுக்கவல்முறை ஏற்பட்டது.அதற்காக மக்காளால் நியமிக்கப்பட்ட உடல்வலிவும் போர்த்திறமையும் உள்ள தலைவன் தான் காவலன்.பிற்காலத்தில் ஏற்பட்ட பல மாறுதல்களையோட்டி காவலன் அரசன் எனப்பட்டான்.புலன் இன்ப வாழ்விலே மக்களில் பலர் நேறிதவறிய செயல்களாலும்,எண்ணங்களாலும் வாழ்வில் சிக்கல்கள் பலதோன்றின. பின்னர் இயற்கையை ஆராயும் சிந்தனையாளர்கள் மனிதசமுதாயத்தில் உருவானார்கள்.அவர்கள் அறிவைஉட்செலுத்தி உடலுக்குள் உயிரையும்,உயிரை நிலைக்கலனாகக் கொண்டுவிரிந்தது இயங்கும் அறிவையும் பேரியக்கமண்டல நிகழ்ச்சிகளுகுக்கெல்லாம் மூல ஆற்றலான இறைநிளையும் உணர்ந்தார்கள்.இவ்வகையில் அறிவுவிரிந்தது இயற்கையை உணர்ந்ததெளிவுலே மக்களுக்கும்,அரசுக்கும்,வணிகருக்கும் ஏற்படக் கூடிய வாழ்க்கைச் சிக்கல்களை அவ்வப்போது ஆராய்ந்து சிக்கல் தீர்த்து சீராகவாழும் முறைகளைப்போதனை செய்தார்கள்.இவர்கள் எல்லாவற்றையும் பர்ப்பவனாகிய அறிவு யார் என அறிவை நோக்கி உள்நோக்கிப் பார்க்கும் அகத்தவ முறையைப் பயின்றதால் பார்பனர் என்று,முடிவாக பெரியக்கமண்டல நிகழ்ச்சிகள் அனைத்தையும் தனது அழுத்தம் எனும் ஒரேஆற்றலால் துல்லியமாக இய்ங்கிவரச்செய்யும் ஆதியும்அனதியுமான மெய்பொருளை பிரம்ம நிலையை உணர்ந்தவர் என்ற உயர்கருத்தில் மெய்ஞானி,பிராமணர் என்றும்வழங்கப்பட்டனர். ஆழ்ந்து ஆராயுமிடத்து ஒரே சாதியானஉழைப்பாளி, எல்லார் வாழ்வுக்கும் ஆதாரமானவனயிருப்பதனால் சூத்திரன் என்ற மதிப்பைப் பெற்ற உளைப்பளியிருந்து தான் தேவைக்கும் காலத்திற்கும் ஏற்ப வணிகன்,அரசன்,மெய்ஞ்ஞானி என்ற மூன்று பிரிவுனரும் தோன்றியிருக்கிறார்கள். எந்தத் தொழிலையும் திறமையாக,சிறப்பாகவும் செய்யக்கற்றுக் கொள்ள கல்விக் கூடங்கள் இல்லாத காலத்தில்,தந்தை செய்த தொழிலையே மகனும் கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் அந்தத் தொழிலை ஒட்டி சூத்திரன்(உழைப்பாளி),வைசியன்(வணிகன்),அரசன்(சத்திரியன்),மெய்ஞ்ஞானி (பிராமணன்),என்று பிரித்து பேசப்பட்டது.தொடர்ந்து பழக்கத்திற்கும் வந்துவிட்டது.இனி இன்றையநிலைமையைக் கவனிப்போம். விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு எவரும் எந்தத்தொளிளையும் கற்கலாம்,செய்யலாம் என்பதனால் தனியே சூத்திரன் என்பதுமறைந்துவிட்டது. எவர் என்றாலும் எல்லாருமே வாணிபம் செய்யலாம் என்ற வாய்ப்பு ஏற்பட்டுச்செயலிலும் வந்து விட்டது வைசியன் என்ற தனிப்பிரிவு போய்விட்டது. வக்குச்சீட்டுப் போட்டு எந்த குடிமகனையும் ஆட்சியாளனாகாக்கொண்டு வரலாம் என்ற நிலை ஆட்சிக்கு விட்டதால் சத்திரியன் என்றதனிப்பிரிவு மனிதசமுதாயலித்திருந்து விடை பெற்றுக்கொண்டது. விஞ்ஞானக் கல்வியால் எவரும் விண் அறிவும் நுண்ணறிவும் பெற வாய்ப்பும் அகத்தவ சாதனையால் எவர்முயன்றாலும் பிரம்மத்தை அறிந்து அறிவில் முழுமைபெறலாம்.மெய்ஞ்ஞானியாகலாம் என்ற சமுதயநிலை உருவகிவிட்டதல் தனியே பார்ப்பான் -பிராமணன் என்ற பிரிவு மறைந்து விட்டது. உழைத்துப் பொருள் ஈட்டும் உளைப்பளியிலேயே, சூத்திரநிலேயே நான்கு ஜாதிகளும் ஒன்ருபட்டுவிட்டது. இந்த உண்மையை உணர்ந்து சாதியால் மனிதனிடம் ஏற்றத்தாழ்வு காணமல் உலகம் ஒன்று,மனிதசமுதாயம் ஒன்று அதில் நாம் அனைவரும் உடன்பிரந்தவ்ர்களே என்ற விரிந்த நோக்கில் ஒருவருக்கு ஒருவர் உதவியும் எவரும் பிறருக்கு எவ்வகையிலும் தீமை செய்யாமலும் அறவழியில் நின்று வாழ்வோம்.அமைதியும் இன்பமும் கூடிய வாழ்வை அனுபவிப்போம்."வாழ்க வளமுடன்" -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி