சனி, 23 ஜூலை, 2011

சிந்தனை விருந்து பூர்ணப் பொருள் பிரபஞ்சத்தில் காணும் எந்தப் பொருளும் அணுக்களின் கூட்டமே.சக்தி என்றாலும்,வேகம் என்றாலும் ஒன்றே.வேகம் என்பது பிறக்கும் இடம் அணுவேயாகும்.அணுவில் ஒரு வேகம் இருக்கின்றதென்றால் அது ஒரு குறைநிலையாக இருந்து நிறைவான ஒன்றை நாடி எழுகிறது என்பதுதான் பொருள்.குறை என்பது நிறைவான ஒன்றைஇணை வைத்தும்,ஆதாரமாகவும் கொண்டுஇருக்கும் ஒரு மாறுபட்டநிலை.ஆகவே அணு என்ற ஒரு குறை நிலைக்கு மூலமும் முடிவுமாக இருப்பது ஒரே பூரணப்பொருள்தான் என்று விளங்குகிறது. அணுவைக் கடந்த ஒரு பொருளோ, அணுநிலையைக் கடந்த ஒரு நிலையோ உண்டு எனில் அது வெட்டவெளியைத் தவிர வேறோன்ரும்மில்லை. ஆகவே,வெட்டவெளி என்ற தத்துவமை அனைத்திற்கும் ஆதாரமாகவும்,மூல சக்தியாகவும் உள்ளசர்வ வல்லமையும் உடைய ஒரு உறுதிபொருள் என்றும் அதுவேஆதியாகவும்,அனாதியகவும் உள்ள பூரணப்பொருள் எனவும் திடமாகக் கூறுகிறேன். இயற்கையில் ஆதி நிலை என்றும் சிவம் என்றும் தெய்வம் என்று பேசப்படுகிறது இதுவே. ஒரு மனிதன் விந்து நாதத் தொடர்பைப் பின் நோக்கி ஆராய்ந்து கொண்டே போனால் அது பல்லாயிரம் ஜிவராசிகளைக் கடந்து கடைசியாக அணுவிலேதான் போய் முடிவு பெறும்.அணுவின் மூலமோ மேலே விளக்கிய வெட்டவெளிதான் என்றும் தெரிந்துவிடும். அங்கிருந்து முன்நோக்கிப் பார்த்தல் பிரபஞ்சமாக விரிந்துள்ள அனைத்துமே ஒரே மூலத்தை அடிப்படயாகக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கு உண்மை அறிவுக்கு அகக்காட்சியாகும். வாழ்க வளமுடன்" -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி